21 July 2013

அபுதாபியில் மர்ம சாவு வேளாண் விஞ்ஞானி உடல் சொந்த ஊரில் அடக்கம்

அபுதாபியில் மர்ம சாவு வேளாண் விஞ்ஞானி 
உடல் சொந்த ஊரில் அடக்கம்


பந்தலூர்:
 
               அபுதாபியில் மர்மமான முறையில் இறந்த வேளாண் விஞ்ஞானியின்  உடல் நேற்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

பந்தலூர் அருகே எருமாடு மாதமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் பத்மநாபன்(65). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்.

  
இவரது மூத்த மகன் நிதின்(27) 2012ம் ஆண்டு அபுதாபியில் வேளாண் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளராக பணியில் சேர்ந் தார். கடந்த மாதம் சொந்த ஊர் வந்த அவர் மீண்டும் கடந்த 7ம் தேதி அபுதாபியில் பணியில் சேர்ந்தார். பின்னர் 9ம் தேதி காரின் இருக்கையில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

தகவல் அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மர்ம சாவு என்ப தால் அபுதாபி சிஐடி போலீசார் வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள் ளது.

 இதையடுத்து நீலகிரி எம்பி ராசா முயற்சியில், மத்திய அமைச்சர் வயலார் ரவி நடவடிக்கை மேற்கொண்டார். அபுதாபி நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பின் சடலம் நேற்றுமுன்தினம் விமானம் மூலம் கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.அங்கிருந்து நேற்று மதியம் கார் மூலம் எருமாட்டில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி, தாசில்தார் மணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து விஞ்ஞானியின் உடல் வெட்டி வாடி முக்குகுன்னு பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட் டது.

0 Responses to “அபுதாபியில் மர்ம சாவு வேளாண் விஞ்ஞானி உடல் சொந்த ஊரில் அடக்கம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT