21 July 2013

சென்னை - டில்லி- பெங்களூரூ- மும்பை விமான நிலையங்களை தகர்க்க சதி திட்டம்

சென்னை - டில்லி- பெங்களூரூ- மும்பை விமான நிலையங்களை 
தகர்க்க சதி திட்டம்

புதுடில்லி: 

     நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. 

இதன்படி சம்பந்தப்பட்ட விமான நிலைய பாதுகாப்பு துறையினர் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
.
 
மத்திய உளவுப்பிரிவுக்கு ( ஐ.பி) கிடைத்த தகவலில் 
தெரிய வந்துள்ள விவரம் வருமாறு:

 அரசுக்கு மிரட்டல் விடுக்க :

நாட்டில் விமான நிலையங்களில் திடீர் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்கான தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். 

புதுடில்லி, மும்பை, பெங்களூரூ, சென்னை, ஆமதாபாத், ஐதராபாத் , கவுகாத்தி ஆகிய 7 விமான நிலையங்கள் பயங்கரவாதிகளின் சதி திட்ட பட்டியலில் உள்ளது. மேற்கூறிய நிலையங்களில் சிறிய ரக விமானம் மூலம் பறந்து வந்து தாக்குதல் நடத்துவது, மற்றும் நமது நாட்டு விமானங்களை கடத்துவது, இதன் மூலம் பயணிகளை பிணையக்கைதிகளாக வைத்து அரசுக்கு மிரட்டல் விடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர். குறிப்பாக புதிய சக்தி வாய்ந்த வெடிபொருட்களை பயன்படுத்த வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிய வருகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட விமான நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளவும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய, மாநில பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். விமான நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தலிபான் பயங்கரவாதிகள் கடத்தல் : 

                 கடந்த 1999 ல் டிசம்பர் மாதம் 24 ம் தேதி நேபாளத்தில் இருந்து டில்லி நோக்கி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தி காந்தகார் கொண்டு சென்றனர். இதில் சில பயங்கரவாதிகளை சிறையில் இருந்து விடுவிக்க கோரினர். 

இதனையடுத்து மவுலானா மசூத் ஆசார், அகமது ஓமர் சையீது ஷேக், அகம்மது சர்கார் ஆகிய 3 பயங்கரவாதிகளை இந்தியா விடுவித்தது, இதனையடுத்து 7 நாட்களுக்கு பின்னர் இந்த கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்தது. 

இதில் இருந்த பயணிகள் 177 பேரும் விமான ஊழியர்கள் 15 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


0 Responses to “சென்னை - டில்லி- பெங்களூரூ- மும்பை விமான நிலையங்களை தகர்க்க சதி திட்டம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT