23 July 2013

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ்- மிடில்டன் தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ்- மிடில்டன் தம்பதியருக்கு 
அழகான ஆண் குழந்தை பிறந்தது


லண்டன்:
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்சின் மனைவி, கேட் மிடில்டனுக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேட் மிடில்டன், பிரசவத்திற்காக, லண்டனில் உள்ள செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில், கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று காலை முதலே அவருக்கு பிரசவ வலி இருந்து வந்தது.இந்நிலையில் இன்று (திங்கள் கிழமை) மாலை 4.24 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததாக கென்சிங்டன் மாளிகை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது.

முன்றே முக்கால் எடை:பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்žஸ் மனைவி கேத் மிடில்டனுக்கு இன்று பிறந்த ஆண் குழந்தை ‌மூன்றே முக்கால் எடையுடன் அழகாக பிறந்தது. குழந்தை பிறப்பு பற்றிய செய்தி தெரிய வந்தவுடன் பிரிட்டன் முழுவதும் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளது.

பிரதமர் கேமரூன் பெருமிதம்: பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ் மனைவி கேத் மிடில்டனுக்கு ஆண் குழந்தை பிறந்தது குறித்து நாடெங்கிலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். மன்னர் குடும்பத்திற்கு அடுத்த வாரிசு கிடைத்துவிட்டது. எதிர்காலத்தில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மன்னராக வாய்ப்பு உள்ளது.இளவரசர் சார்லஸ், அவரது மகன் வில்லியம் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாக இப்போது பிறந்துள்ள குழந்தை கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் பாராட்டு:பிரி்ட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ் மனைவி கேத் மிடில்டன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்ததை அறிந்த அமெரிக்க அதிபர் ஒபாமா-மிச்சலே தம்பதியர் இருவரும் ஆசீர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அறிவிப்பு விவரம்: குழந்தை பிறப்பு பற்றிய செய்தி, முதலில், மருத்துவமனை மருத்துவரின் மூலம், ஒரு சீட்டில் எழுதப்பட்டு, அரண்மனை, கார் ஓட்டுனரிடம் கொடுக்கப்படும். அங்கிருந்து அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அரச குடும்பத்தாரின் ஒப்புதலுக்குப் பின், பொதுமக்களின் பார்வைக்காக, தகவல் பலகையில் ஒட்டப்படும். இந்த முறையான நிகழ்வுகளுக்கு முன்னரே, செய்திகளை ஒளிபரப்பும் ஆர்வத்தில் ஊடகங்கள் செயல்படுவதால், கடிதத்தை தெளிவாக பெரிதாக்கி காட்டும் கேமராக்களுடன், பத்திரிகையாளர்கள் வலம் வருகின்றனர். மேலும், வில்லியம்சின் மனைவி, கேட், எந்த நேரத்திலும், குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வெளியே வரலாம் என்பதால், மருத்துவமனையின் அனைத்து வாயில்களிலும், ஊடகங்களின் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

உற்‌சாக கொண்டாட்டம்:பிரிட்டன் மட்டுமின்றி, சீனா, ஜப்பான், கொரியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும், மருத்துவமனை வளாகத்தில் முகாமிட்டு உள்ளனர். "கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், வில்லியமும், அவரது சகோதரர், ஹாரியும் பிறந்தபோது கூட, இத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவில்லை' என, பிரிட்டன் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 Responses to “பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ்- மிடில்டன் தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT