21 July 2013

ருத்ர நகரம் (PACIFIC RIM) - திரை விமர்சனம்

ருத்ர நகரம் (PACIFIC RIM)  - திரை விமர்சனம்



பூமியில் மனிதர்களை அழித்துவிட்டு தங்கள் இனத்தை குடியமர்த்த திட்டமிடுகிறார்கள் ஏலியன்கள். அது நடந்ததா, இல்லையா என்பதுதான் பசிபிக் ரிம். தமிழில் ‘ருத்ர நகரம்’.

உலகத்தை அழிக்க கைஜு எனப்படும் ராட்சத உயிரினங்களை அனுப்புகிறார்கள் ஏலியன்கள். பசிபிக் கடலின் ஆழத்தில் மறைந்திருக்கும் கைஜுக்கள், அவ்வப்போது வந்து உலகை சிதைக்கின்றன. இதை அழிக்க அமெரிக்கா, சிறப்பு படைப் பிரிவை உருவாக்குகிறது. அதன் தளபதி, ஏகர் எனப்படும் இயந்திர மனிதர்களை உருவாக்குகிறார்.

 ஒரு ஏகரை இரண்டு வீரர்கள் இணைந்து இயக்குவார்கள். ஆனாலும் கைஜுக்களை வெல்ல முடியவில்லை. அரசும் சிறப்பு பிரிவுக்கு நிதியை நிறுத்துகிறது. இதனால் அதன் தளபதி தன் சொந்த பொறுப்பில் அந்த அமைப்பை நடத்துகிறார். ராட்சத இயந்திர மனிதர்களை உருவாக்கி, அதை திறமையாக இயக்கும் ஹீரோவை அழைத்து வருகிறார். அந்த அமைப்பில் இருக்கும் ஒருவர் கைஜுவின் மூளைக்குள் ஊடுருவிச் சென்று அதன் திட்டத்தை அறிகிறார். பிறகு அதை எப்படி அழிக்கிறார்கள் என்பது கதை.

பிரமாண்ட லேப், ராட்சத ரோபோக்கள், அதை விட பெரிதாக கைஜுக்கள் என பெரிய ஸ்கிரீன் இருந்தால்தான் படத்தை முழுதாக பார்க்க முடியும் என்கிற அளவுக்கு எல்லாமே பெரிது. மொத்த படமும் கிராபிக்ஸ் கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று கண்டுபிடிக்க முடியாத அளவு அத்தனை நேர்த்தி. கைஜுக்களின் உலகம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருக்கிறது. அந்த உலகத்துக்குள் புகுந்து அதை அழிப்பது பிரமாண்டம்.

இந்த கதைக்குள்ளும் அண்ணன்,தம்பி பாசம், வளர்ப்பு குழந்தை,அப்பா பாசம், ஈகோ மோதல் என சென்டிமென்டுகளுக்கும் பஞ்சம் இல்லை. ஹீரோவுக்கு பூக்கும் அந்த சின்ன காதலும் அழகான கவிதை. கைஜுக்களை அழிக்க முடியாமல் படைப்பிரிவை கலைக்கும் அரசு, மாற்றுப் படையை உருவாக்காமல் விடுவது ஏன்? ஒரு தனி மனிதரால் எப்படி பிரமாண்ட படையை அரசுக்கு தெரியாமல் நடத்த முடியும் என்ற கேள்விகளும், பல காட்சிகளில் கிராபிக்ஸ் ஓவராகி, சேனலில் பவர் ரேஞ்சர் பார்க்கும் உணர்வு ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.

0 Responses to “ருத்ர நகரம் (PACIFIC RIM) - திரை விமர்சனம் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT