20 September 2013

படம் தோல்வி அடைந்தாலும் தமன்னாவுக்கு கைகொடுத்த கவர்ச்சி

படம் தோல்வி அடைந்தாலும் தமன்னாவுக்கு கைகொடுத்த கவர்ச்சி  




 தமிழில் ஒரு படம் தவிர வேறு படங்கள் கைவசம் இல்லாத நிலையில் இந்தியில் ஆடிய கவர்ச்சி ஆட்டம் தமன்னாவுக்கு கைகொடுக்கிறது. விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துவந்த தமன்னா கடந்த சில வருடங்களாக தமிழ் படங்களில் கவனம் செலுத்தாமல் தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தார். 

போட்டி நடிகைகளின் ஆதிக்கத்தால் பட வாய்ப்புகள் குறைந்தது. பிறகு பாலிவுட்டில் கவனத்தை திருப்பினார் தமன்னா. ‘ஹிம்மத்வாலா‘ என்ற படம் மூலம் இந்தி படவுலகிற்குள் நுழைந்தார். அப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதையடுத்து மீண்டும் தெலுங்கு படங்களில் கவனத்தை திருப்பினார். நீண்ட காத்திருப்புக்கு பிறகு இந்த ஆண்டு ‘தடகா என்ற ஒரு படம் மட்டுமே நடிக்க முடிந்தது. 

தமிழில் 1 வருடத்துக்கும் மேலாக நடிக்காமல் ஒதுங்கி இருந்த தமன்னா தற்போது அஜீத் ஜோடியாக ‘வீரம்Õ படத்தில் நடிக்கிறார். இதுதவிர தெலுங்கு, தமிழில் அவருக்கு வேறுபடம் எதுவும் கைவசம் இல்லை. மீண்டும் அவர் பாலிவுட் பக்கம் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

 ‘ஹிம்மத்வாலா‘ படம் தோல்வி படமாக அமைந்தாலும் அதில் கவர்ச்சி தூக்கலாக நடித்திருந்தார். அது இப்போது கைகொடுத்திருக்கிறது. அக்ஷய்குமாருடன் ‘என்டர்டெய்ன்மென்ட்Õ என்ற படம் உள்ளிட்ட 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

0 Responses to “படம் தோல்வி அடைந்தாலும் தமன்னாவுக்கு கைகொடுத்த கவர்ச்சி ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT