10 October 2013

1 லட்சம் மணிநேரம் பறந்து சாதனை படைத்த இந்தியாவின் 'துருவ்' ஹெலிகாப்டர்

1 லட்சம் மணிநேரம் பறந்து சாதனை படைத்த 
இந்தியாவின் 'துருவ்' ஹெலிகாப்டர்


 பெங்களூர், அக்.10:

முழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்பத்துடன் பெங்களூரில் உள்ள ஹெச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்த 'துருவ்' ரக ஹெலிகாப்டர் 1 லட்சம் மணி நேரம் பறந்து சாதனை படைத்துள்ளது.

2002-ம் ஆண்டில் இருந்து இந்த ஹெலிகாப்டரை இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை, எல்லை பாதுகாப்பு படை போன்றவை பயன்படுத்தியுள்ளன.

IA 3104 என்ற எண் கொண்ட இந்த ஹெலிகாப்டர் நேற்றுடன் 1 லட்சம் மணிநேரம் வானத்தில் பறந்து சாதனை படைத்துள்ளது.

தற்போது இந்திய முப்படைகளிடம் இவ்வகையிலான 132 துருவ் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர ஈக்வேடர், மொரிஷியஸ், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் இவ்வகை ஹெலிகாப்டர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

10 முதல் 16 பயணிகளை சுமந்தபடி காஷ்மீரில் உள்ள சியாச்சென் பனிமலை பகுதியிலும் 10 ஆயிரம் அடி உயரத்தில் இந்த ஹெலிகாப்டர் பறக்கவல்லது.

2004ல் ஏற்பட்ட சுனாமி பேரழிவு, 2010ல் லே பகுதியில் உண்டான பெருவெள்ளம், 2011ல் சிக்கிமை உலுக்கிய நிலநடுக்கம், சமீபத்தில் உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆகியவற்றில் துருவ் ஆற்றிய அரும்பணி சிறப்பிடம் பெற்றது

0 Responses to “1 லட்சம் மணிநேரம் பறந்து சாதனை படைத்த இந்தியாவின் 'துருவ்' ஹெலிகாப்டர்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT