11 October 2013

டி20ல் இந்தியா அபார வெற்றி : யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது

டி20ல் இந்தியா அபார வெற்றி : யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது


ராஜ்கோட் :

           ஆஸ்திரேலிய அணியுடனான டி20 போட்டியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ராஜ்கோட், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. ஆஸி. அணி தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், மேடின்சன் களமிறங்கினர். மேடின்சன் 34 ரன் எடுத்து (16 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வாட்சன் 6, கேப்டன் பெய்லி (0) இருவரும் வினய் குமார் வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து ஆரோன் பிஞ்ச்சுடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். அஷ்வின் வீசிய 10வது ஓவரில் பிஞ்ச் ஒரு பவுண்டரி, மேக்ஸ்வெல் 3 சிக்சர் விளாசினர். அந்த ஓவரில் மட்டும் ஆஸி. அணிக்கு 24 ரன் கிடைத்தது.

மேக்ஸ்வெல் 27 ரன் எடுத்து (13 பந்து, 4 சிக்சர்) ஜடேஜா சுழலில் இஷாந்த் வசம் பிடிபட்டார். ஹாடின் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மிரட்டலாக விளையாடிய பிஞ்ச் 89 ரன் எடுத்து (52 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்) வினய் குமார் வேகத்தில் அவரிடமே பிடிபட்டார்.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. கோல்ட்டர் நைல் 12, ஜேம்ஸ் பாக்னர் 10 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், வினய் குமார் தலா 3 விக்கெட், ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.  அஷ்வின் 2 ஓவரில் 41 ரன் விட்டுக் கொடுத்து ஏமாற்றமளித்
தார்.

அடுத்து 20 ஓவரில் 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்து அபாரமாக வென்றது.  யுவராஜ் சிங் அதிகபட்சமாக  77* ரன் (35 பந்து 8 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். தவான் 32, ரெய்னா 19, கோஹ்லி 29, தோனி 24* எடுத்தனர். யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


0 Responses to “டி20ல் இந்தியா அபார வெற்றி : யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT