10 October 2013

இன்னும் 7 ஆண்டுகளுக்கு பிறகு 'சாக்லேட்' யாருக்கும் கிட்டாத அரிபொருள் ஆகிவிடும்: நிபுணர்கள் தகவல்

இன்னும் 7 ஆண்டுகளுக்கு பிறகு 'சாக்லேட்' 
யாருக்கும் கிட்டாத அரிபொருள் ஆகிவிடும்
 நிபுணர்கள் தகவல்


புதுடெல்லி, அக்.10:

குழந்தைகள் முதல் முதியவர் வரை சாக்லேட் என்ற மந்திர வார்த்தையை கேட்டவுடன் இளமுறுகலான அந்த பொன்னிறமும், மனதை சுண்டி இழுக்கும் அதன் மணமும், சுவையும் நாக்கில் நீரை சுரக்கச் செய்து விடும்.

கோக்கோ என்னும் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் அசல் சாக்லேட்களுக்கு உலகளாவிய அளவில் கடும் கிராக்கி உள்ளது. ஒருபுறம் சாக்லேட் பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மற்றொரு புறம், கோக்கோவை பயிரிடும் விளை நிலங்கள் நாளடைவில் குறுகிக்கெண்டே போகின்றன.

கோக்கோவை பணப் பயிராக விளைவித்து வந்த விவசாயிகள் பலர் தற்போது அதிக லாபம் தரக்கூடிய ரப்பர் மரத்தின் மீது கவனத்தை செலுத்த தொடங்கி விட்டனர்.

தரமான கோக்கோ விளைச்சலுக்கு பெயர் போன தென்னாப்பிரிக்க நாடுகளும் இனி கோக்கோவை பயிரிடுவதால் பெரிய லாபத்தை பார்க்க முடியாது என்று முடிவெடுத்து விட்டது.

இந்நிலையில், தேர்வில் 'பாஸ்' ஆகிய செய்தியை சொல்ல, காதலை வெளிப்படுத்த என ஆண்-பெண் இருபாலருக்கும் அருமையான தூதுவனாக இருந்து வந்த சாக்லேட்டின் விலை தாறுமாறாக எகிறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதுவும், முழுக்க முகுக்க பதப்படுத்திய கிரீமி சாக்லேட்களுக்கு பதிலாக, சிறிதளவு சாக்லேட் கலக்கப்பட்ட மொறுமொறுப்பான 'வேஃபர்' வகைகள் தான் சந்தையில் கிடைக்கும்.

2020-க்கு பிறகு தூய சாக்லேட் என்பது சாமான்ய மக்களின் கைகளுக்கு எட்டாத அரிபொருளாகி விடும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

0 Responses to “இன்னும் 7 ஆண்டுகளுக்கு பிறகு 'சாக்லேட்' யாருக்கும் கிட்டாத அரிபொருள் ஆகிவிடும்: நிபுணர்கள் தகவல்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT