3 December 2013

அமெரிக்காவில் பயங்கரம் மெட்ரோ ரயில் ஆற்றில் பாய்ந்தது 4 பேர் பலி; 67 பேர் காயம்

அமெரிக்காவில் பயங்கரம் மெட்ரோ ரயில் ஆற்றில் பாய்ந்தது
 4 பேர் பலி; 67 பேர் காயம் 


நியூயார்க்:

           அமெரிக்காவில் மெட்ரோ ரயில் தடம்புரண்டு ஆற்றுக்குள் பாய்ந்ததில், பெண்கள் உள்பட 4 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 67 பேர் படுகாயம் அடைந்தனர்.அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள போகீப்சீ என்ற இடத்தில் இருந்து நியூயார்க் நகரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சென்று வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் நியூயார்க் நோக்கி மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்தது.

ஸ்புடென் டுவில் ரயில் நிலையம் அருகே பிராங்ஸ் என்ற பகுதியில் ரயில் சென்றது. இங்குதான் ஹட்சன் மற்றும் ஹர்லெம் ஆறுகள் ஒன்றிணைகின்றன. இந்த பகுதியில் உள்ள ஒரு திருப்பத்தில் சென்றபோது, ரயிலின் பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டது. இதனையடுத்து வேகமாக தண்டவாளத்தை விட்டு வெளியேறி ஆற்றுக்குள் ரயில் பாய்ந்தது. 3 பெட்டிகள் வரை ஆற்றின் அருகில் விழுந்தன.

ரயில் படுவேகமாக ஆற்றுக்குள் பாய்வதைக் கண்டு பயணிகள் அலறினர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உள்பட 4 பேர் உடல் நசுங்கி பலியாயினர்.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 67 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 11 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கவ்மோ கூறுகையில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத் தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் அதிபர் ஒபாமா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

0 Responses to “அமெரிக்காவில் பயங்கரம் மெட்ரோ ரயில் ஆற்றில் பாய்ந்தது 4 பேர் பலி; 67 பேர் காயம் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT