18 July 2013

பரமக்குடியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிய கைதி பிடிபட்டான்

பரமக்குடியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிய கைதி பிடிபட்டான்



பரமக்குடி, ஜூலை. 18:

                    இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்த் (வயது 48). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வீரபாண்டி மகன் பூமுருகனுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

நேற்று கோவிந்த் வீட்டின் முன்பு பூமுருகன், பாரதி, முருகன், ஜோதி ஆகிய 4 பேரும் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசினர். ஆனால் குண்டு வெடிக்கவில்லை.

இது குறித்து கோவிந்த் பரமக்குடி நகர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரத்தினக்குமார் வழக்குப்பதிவு செய்து பூமுருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் மற்ற 3 பேரும் தலைமறைவாகினர். நீதிபதி ரேவதி, பூமுருகனை 15 நாட்கள் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து ஏட்டுகள் பூமி, வேலுச்சாமி ஆகியோர் பூமுருகனை மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்வதற்காக பரமக்குடி பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது பூமுருகன், போலீசார் இருவரையும் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். டவுன் இன்ஸ்பெக்டர் ரத்தினக்குமார் தலைமையில் நான்கு போலீஸ் குழுவினர் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்நிலையில் இன்று அதிகாலை பரமக்குடி அருகே கமுதக்குடி கருவக்காட்டு பகுதியில் பதுங்கி இருந்த பூமுருகனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து மதுரைக்கு அழைத்து சென்றனர்.

No comments:

Post a Comment