19 July 2013

தனுஷின் புதிய படமான ‘வேங்கை சாமி’ யில் ஜோடி சேருகிறார் மனிஷா

தனுஷின் புதிய படமான  ‘வேங்கை சாமி’ யில் ஜோடி சேருகிறார் மனிஷா



‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களை அடுத்து வெற்றிமாறன்-தனுஷ் இணையும் புதிய படத்திற்கு ‘வேங்கை சாமி’ என பெயரிட்டுள்ளனர். 

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘வழக்கு எண் 18/9’ என்ற படத்தில் நாயகியாக நடித்த மனிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இதுகுறித்து அவர் கூறும்போது, நான் தனுஷின் தீவிர ரசிகை. வெற்றிமாறன் படத்தில் நடிப்பதற்காக என்னை அழைத்து மேக்கப் டெஸ்ட் வைத்தார்கள். இப்படத்தில் நடிகையாக நான் ஒப்பந்தம் செய்யப்பட்டால் அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை மனிஷா வெற்றிமாறனின் மற்றொரு படத்தில் நடிக்க உள்ளாராம். ஆனால், அதுகுறித்து அவர் வாய் திறக்கவே இல்லை.

நடிகை மனிஷா தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஆதலால் காதல் செய்வீர்’ மற்றும் கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘ஜன்னல் ஓரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

No comments:

Post a Comment