10 June 2013

தர்மபுரியில் கிட்னி மோசடியில் 2 பேர் கைது

தர்மபுரியில் கிட்னி மோசடியில் 2 பேர் கைது


தருமபுரி, ஜூன் 10:

தருமபுரியில் சிறுநீரக மோசடி தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட எஸ்.பி. அஷ்ரா கார்க் கூறியதாவது:- 

தருமபுரியில் சிறுநீரக மோசடிக் கும்பல் பற்றி புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு பாலசுப்பிரமணியம், அய்யாவு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் 30-க்கும் மேற்பட்டவர்களிடம் அவர்கள் சிறுநீரக மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஏழைகளை குறிவைத்தே அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


0 Responses to “தர்மபுரியில் கிட்னி மோசடியில் 2 பேர் கைது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT