26 June 2013
பேஸ்புக் தொடர்பால் விபரீதம் பாலியல் பெண்ணை தேடி சென்ற மயிலாப்பூர் வாலிபர் படுகொலை
Do you like this story?
பேஸ்புக் தொடர்பால் விபரீதம்
பாலியல் பெண்ணை தேடி சென்ற மயிலாப்பூர் வாலிபர் படுகொலை
சென்னை : பேஸ்புக் தொடர்பையடுத்து செல்போனில் பேசி, பாலியல் தொழில் பெண்ணை தேடி சென்ற மயிலாப்பூர் வாலிபரை கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தாமரைப்பாக்கம் அருகே காரணிபாட்டை லட்சுமி நகரில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த மாதம் 9ம்தேதி வெட்டுக்காயங்களுடன் வாலிபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இதில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த மனோஜ்குமார் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
மனோஜ் குமார் கொலை தொடர்பாக தண்டையார்பேட்டையில் உள்ள மாநகர பஸ் டெப்போவில் மெக்கானிக்காக பணிபுரியும் பொன்னேரி ஏலியம்பேடு திருப்பேர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (29), மாதவரம் பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றும் புழல் ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த பாலமுருகன் நகரை சேர்ந்த தயானந்தன் (30) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
போலீசில் அவர்கள் அளித்த வாக்குமூலம்:
பேஸ்புக் மூலம் மனோஜ்குமாரின் செல்போன் நம்பரை கண்டுபிடித்து அவருடன் பேசினோம். அப்போது, பாலியல் தொழில் செய்யும் பெண் இருக்கிறார். அவருடன் உல்லாசமாக இருக்கலாம் என்றோம். இதனால் மனோஜ்குமார் எங்களுடன் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டார். அப்போது, ரெட்ஹில்ஸ் வந்துவிடுங்கள், அங்கிருந்து உங்களை பெண்ணிடம் அழைத்து செல்கிறோம். அதற்கு முன்பாக என்னுடைய வங்கி கணக்கில் முன்பணமாக 2000 செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான ரசீதை கொண்டு வந்தால்தான் அழைத்து செல்வோம் என்றோம். நேரில் வந்து பணத்தை தருவதாக கூறினார்.
அதன்பிறகு மொபட்டில் ரெட்ஹில்ஸ் வந்தார். 3 பேரும் மது அருந்தினோம். பிறகு பணம் தரும்படி கேட்டோம். நான் எடுத்து வந்த பணத்தில் மது வாங்கி தந்துவிட்டேன். என்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் மனோஜ்குமாரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு ஓடிவிட்டோம்.
இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். வெங்கடேசன், தயானந்தனிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அவர்களிடமிருந்து லேப்டாப் மற்றும் மனோஜ்குமாரின் செல்போன், மொபட் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “பேஸ்புக் தொடர்பால் விபரீதம் பாலியல் பெண்ணை தேடி சென்ற மயிலாப்பூர் வாலிபர் படுகொலை”
Post a Comment