21 June 2013

சாம்பியன்ஸ் கோப்பை இந்தியா - இலங்கை அரை இறுதி போட்டியில் மைதானத்தில் நுழைந்த ஈழத் தமிழர்களின் ஆதரவாளர்கள்

சாம்பியன்ஸ் கோப்பை இந்தியா - இலங்கை 

அரை இறுதி போட்டியில்  மைதானத்தில் நுழைந்த 

ஈழத் தமிழர்களின் ஆதரவாளர்கள்

கார்டிப்: இந்திய - இலங்கை அணிக்களுக்கு இடையே நேற்று நடந்த அரைஇறுதி போட்டியின் போது, ஈழத் தமிழர்களின் கொடியை ஏந்தி கொண்டு மைதானத்தில் திடீரென அவர்கள் நுழைந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது (49.1 ஓவரில்) நுழைந்த அந்த முதல் நபர் ஈழத் தமிழர்களுக்கு ஆதவராகவும், ராஜபக்சேவிற்கு எதிராகவும் வாசகங்களை கொண்ட போஸ்டரை ஏந்தி மைதானத்தில் வலம் வந்தார். மேலும் இலங்கை வீரர் தில்ஷான் முன்பு நின்று அந்த போஸ்டரை காண்பித்தார்.


இதனையடுத்து மைதான காவலாளிகள் அவரை பிடித்துச் சென்றனர். இதன் பிறகு இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஈழத் தமிழர்கள் கொடிகளை ஏந்திக் கொண்டு 5 நபர்கள் மைதானத்தில் வலம் வந்தார்கள். ஆயிரக்கணக்கான இலங்கை ரசிகர்கள் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த போது ஈழத் தமிழர்கள் ஆதரவாளர்கள் மைதானத்தில் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மைதானத்தில் வெளியேற்றப்பட்ட அவர்கள் ஈழத் தமிழர்களின் கொடிகளை ஏந்தி கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to “சாம்பியன்ஸ் கோப்பை இந்தியா - இலங்கை அரை இறுதி போட்டியில் மைதானத்தில் நுழைந்த ஈழத் தமிழர்களின் ஆதரவாளர்கள்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT