7 September 2013
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் – கயல்விழி திருமணம் சென்னையில் நாளை நடக்கிறது
Do you like this story?
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் – கயல்விழி திருமணம் சென்னையில் நாளை நடக்கிறது
நாம் தமிழர் கட்சி தலைவரும், சினிமா டைரக்டருமான சீமானுக்கும் தமிழக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெரியோர்களின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நாளை (8–ந்தேதி) காலை 9 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு திடலில் நடக்கிறது.
தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையிலும், கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு முன்னிலையிலும் நடைபெறும் இந்த திருமணத்தில் தமிழ் அறிஞர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
தமிழ் முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடைபெறுகிறது. திருமண விழாவுக்கு வருபவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. திருமணத்துக்கான ஏற்பாடுகள் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் – கயல்விழி திருமணம் சென்னையில் நாளை நடக்கிறது”
Post a Comment