24 June 2013

இந்த வயதிலும் கவர்ச்சி வேடத்திற்கு ஓகே சொன்ன நடிகை

இந்த வயதிலும் கவர்ச்சி வேடத்திற்கு ஓகே சொன்ன நடிகை 



சென்னை: 

கே.ஜி.பி பிலிம்ஸ் சார்பில் கே.ஜி.பாண்டியன் தயாரிக்கும் படம், 

‘ஆப்பிள் பெண்ணே’. 

ஆர்.கே.கலைமணி இயக்குகிறார். வத்சன், ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார்கள்மணிசர்மா இசை. பிரபாகர் ஒளிப்பதிவு.

படம் பற்றி கலைமணி கூறியதாவது: இளைய தலைமுறையினருக்கு தங்கள் பெற்றோரை புரிந்து கொள்ள முடிவில்லை. சில சம்பவங்கள், நிகழ்வுகளை வைத்தே அவர்களை தீர்மானித்து விடுகிறார்கள்.

இதில் ரோஜா மலையடிவாரத்தில் ஓட்டல் நடத்துகிறவர். தான் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். வாடிக்கையாளர்களிடம் சகஜமாக பேசுபவர். கவர்ச்சியாக உடை அணிபவர்.

 ஆனால் தவறானவர் கிடையாது. அவர் மகள் தன் அம்மாவை எப்படி பார்க்கிறார்? ரோஜாவின் நடத்தை அவரை எப்படி பாதிக்கிறது என்பது கதை. 
கதையை ரோஜாவிடம் சொல்லி கொஞ்சம் கிளாமராக நடிக்க வேண்டி இருக்கும் என்றதும் சரி என்று நடிக்க ஒப்புக் கொண்டார். தம்பி ராமையா ஏட்டாக நடிக்கிறார். தயாரிப்பாளர் கே.ஜி.பாண்டியன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படம் ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறது.

0 Responses to “இந்த வயதிலும் கவர்ச்சி வேடத்திற்கு ஓகே சொன்ன நடிகை ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT