29 June 2013

தி.மு.க அ.தி.மு.க., ரகசிய உடன்பாடு தோல்வியில் வெதும்புகிறார் விஜயகாந்த்

தி.மு.க - அ.தி.மு.க.,  

ரகசிய உடன்பாடு 

தோல்வியில் வெதும்புகிறார் விஜயகாந்த்



சென்னை:
 
                                 "தொகுதி மேம்பாடு மற்றும் தொகுதி மக்களின் நலன் கருதி, முதல்வரை சந்தித்ததாக கூறியவர்களின் நாடகம், ராஜ்யசபா தேர்தல் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. முதல்வரின் உள்நோக்கமும், மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., பல வகைகளில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த தேர்தலில், யார் வெற்றிப்பெற வேண்டும் என்பதை விட, யார் தோல்வி அடைய வேண்டும் என்பதில் தான் அ.தி.மு.க., ஆர்வம் காட்டியது. 

அ.தி.மு.க., முதலில், ஐந்து வேட்பாளர்களை அறிவித்தது; தி.மு.க., வேட்பாளரை நிறுத்தியதும், ஒரு வேட்பாளரை வாபஸ் பெற்று, இந்திய கம்யூ., கட்சிக்கு விட்டு கொடுத்தது. தி.மு.க.,வை வெற்றி பெற செய்வதற்கு, இதை, அ.தி.மு.க., மறைமுகமாக செய்ததோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.

 " தி.மு.க.,வை வெற்றிபெற செய்வது தான், எம்.ஜி.ஆருக்கு இவர்கள் காட்டும் விசுவாசமா?' அ.தி.மு.க., நினைத்திருந்தால், தனது ஓட்டுக்கள் மற்றும் கூட்டணி கட்சியின் ஓட்டுக்கள் மூலம், வெகு சுலபமாக, தி.மு.க.,வை தோல்வியடைய செய்திருக்க முடியும். 

தி.மு.க., -அ.தி.மு.க., வெளியில் தங்களை எதிரி போல காட்டிக்கொண்டாலும், இரு கட்சிகளும் ரகசிய உடன்பாடு கொண்டுள்ளனவோ, என்ற சந்தேகம் வலுப்பெறவே செய்கிறது. "ஸ்பெக்டரம்' ஊழல் நடந்தபோது, கனிமொழியை கடுமையாக எதிர்த்த ஜெயலலிதா, அவருக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தது ஏன்? இந்த தேர்தலின் மூலம் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டு சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. 

தொகுதி மேம்பாடு மற்றும் தொகுதி மக்களின் நலன் கருதி, முதல்வரை சந்தித்ததாக கூறியவர்களின் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. முதல்வரின் உள்நோக்கமும், மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டப்பட்டுள்ளது. தங்களுக்கு அரசியலில் முகவரி கொடுத்து, அடையாளம் காட்டிய கட்சிக்கும், தலைமைக்கும் துரோகம் செய்து விட்டு, ஓட்டளித்ததன் மூலம், அரசியல் வரலாற்றில், மன்னிக்க முடியாத துரோகிகள் இவர்கள் என்பதை வரும் காலம் உணர்த்தும். 

ஏதோ சாதனை செய்து விட்டதாக இறுமாப்புடன் இருக்கும் இவர்களுக்கு," இது சாதனை அல்ல; சந்தி சிரிக்கும் செயல்' என, தொகுதி மக்கள் விரைவில் பாடம் புகட்டுவர். 

இவ்வாறு, விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

0 Responses to “தி.மு.க அ.தி.மு.க., ரகசிய உடன்பாடு தோல்வியில் வெதும்புகிறார் விஜயகாந்த்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT