14 July 2013

இராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் சிங்கம்–2 உட்பட 105 புதிய பட சி.டி.க்கள் பறிமுதல்

இராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் 
சிங்கம்–2 உட்பட 105 புதிய பட சி.டி.க்கள் பறிமுதல் 



இராமநாதபுரம்:

                      இராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் ஏராளமான சி.டி. கடைகள் உள்ளன. இங்கு புதிய பட சி.டி.க்கள் ரகசியமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து கேணிக்கரை சப்–இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் மற்றும் போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்ட னர்.

அப்போது அங்குள்ள 3 கடைகளில் புதுப்பட சி.டி.க்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.  

சிங்கம்–2, குட்டிபுலி, அம்பிகாவதி, தில்லுமுல்லு உள்பட 105 பட சி.டி.க்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

0 Responses to “இராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் சிங்கம்–2 உட்பட 105 புதிய பட சி.டி.க்கள் பறிமுதல் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT