7 August 2013
சென்னையில் கேமரா மூலம் படுக்கை அறையை வீட்டு உரிமையாளர் கண்காணிப்பு : தம்பதி புகார்
Do you like this story?
சென்னையில் கேமரா மூலம் படுக்கை அறையை வீட்டு உரிமையாளர் கண்காணிப்பு : தம்பதி புகார்
சென்னை :
கேமரா மூலம் படுக்கை அறையை கண்காணித்த வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிப்பூர் தம்பதி புகார் அளித்துள்ளனர்.
மணிப்பூரை சேர்ந்தவர் சிங்னு (32). இவர் தனது கணவர் நாங்னோ (35) வுடன் நேற்று மதியம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு ஒன்று அளித்தார். பின்னர், வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தண்டையார்பேட்டையை சேர்ந்த செல்வி மற்றும் அவரது கணவர் சந்திரா ஆகியோர் மர வேலை செய்வதற்காக எங்களை மணிப்பூரில் இருந்து அழைத்து வந்தனர். அவர்கள் வீட்டில் தங்கி இருப்பதற்கு ஒரு அறையும் கொடுத்தனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர்களின் வீட்டிலேயே வசித்து வருகிறோம். சில தினங்களுக்கு முன் செல்வி, சந்திரா தம்பதிகளின் மகன்கள் பாண்டி, விஜய் ஆகியோர் நாங்கள் வசித்த வீட்டில் ரகசிய கண்காணிப்பு கேமராவை பொருத்தி உள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது தகாத வார்த்தைகளால் திட்டினர்.
கணவன், வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் என்னை பலாத்காரம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து நான் வெளியே தப்பி வந்து விட்டேன். இதுகுறித்து கேட்க சென்ற எனது கணவரையும் அடித்து உதைத்தனர்.
கணவன், வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் என்னை பலாத்காரம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து நான் வெளியே தப்பி வந்து விட்டேன். இதுகுறித்து கேட்க சென்ற எனது கணவரையும் அடித்து உதைத்தனர்.
இதுகுறித்து, ஆர்.கே நகர் போலீசில் புகார் அளித்தும் பலன் இல்லை. எங்களுக்கு தரவேண்டிய சம்பள பணம் 2 லட்சத்து 10 ஆயிரத்தையும் கொடுக்கவில்லை.
எனவே, போலீசார் எங்களுக்கு சேர வேண்டிய சம்பள பணத்தை பெற்றுத் தர வேண்டும். கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “சென்னையில் கேமரா மூலம் படுக்கை அறையை வீட்டு உரிமையாளர் கண்காணிப்பு : தம்பதி புகார்”
Post a Comment