19 September 2013

காதல் தகராறு விவகாரம் அண்ணா மேம்பாலத்தில் இருந்து இளம்பெண் குதித்து தற்கொலை

காதல் தகராறு விவகாரம் அண்ணா மேம்பாலத்தில் இருந்து 
இளம்பெண் குதித்து தற்கொலை


சென்னை : 
              கொல்கத்தாவை சேர்ந்தவர் சம்புதாஸ். இவர் மகள் அஞ்சலி(26), மகன் ரவி(24) ஆகியோருடன் கடந்த 8 ஆண்டுகளாக கோடம்பாக்கம் காமராஜ் நகர் கிழக்கு பகுதியில் வசித்து வருகிறார். அஞ்சலி, தி.நகரில் உள்ள அழகுகலை நிலையத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் கணவனை பிரிந்து தந்தை மற்றும் சகோதரனுடன் கோடம்பாக்கத்தில் தங்கியிருந்தார்.

அதன்பின் அவர் வேலை செய்யும் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் புவனேஷ் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா மேம்பாலத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் அஞ்சலி நடந்தபடி செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

பதற்றத்துடன் அங்கும், இங்குமாக 10 நிமிடம் அவர் நடந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த தனியார் நிறுவன காவலாளி பெருமாள் சத்தம் போட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக போலீசில் தகவல் கொடுக்க முயன்றார். அப்போது திடீரென அந்த பெண் அண்ணா மேம்பாலத்தின் மேல் இருந்து நுங்கம்பாக்கம் செல்லும் சாலையில் (ராணி சீதை மன்றம் அருகில்) குதித்தார். இதில், அவரது மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை பார்த்து சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தேனாம்பேட்டை போலீசார் வந்து அஞ்சலியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காதலன் புவனேஷ் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து அஞ்சலியின் சடலத்தை பார்த்து கதறி அழுதார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அஞ்சலி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என காதலன் புவனேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க துணை தூதரகம் அருகில் இருப்பதால், மேம்பாலத்தில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். வாகன நெரிசலும் அதிகமாக இருக்கும். அப்படியிருந்தும் அவர் பாலத்தின் சுவரில் ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Responses to “காதல் தகராறு விவகாரம் அண்ணா மேம்பாலத்தில் இருந்து இளம்பெண் குதித்து தற்கொலை”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT