13 December 2013

பாம்பன் ரெயில்பாலம் நூற்றாண்டு விழாவை மண்டபத்தில் நடத்த முடிவு தென்னக ரெயில்வே பொது மேலாளர் பேட்டி

பாம்பன் ரெயில்பாலம் நூற்றாண்டு விழாவை மண்டபத்தில் நடத்த முடிவு தென்னக ரெயில்வே பொது மேலாளர் பேட்டி




பாம்பன்:


ரெயில் பாலத்தின்நூற் றாண்டு விழாவை மண்டபம், பாம்பனில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே பொது மேலா ளர் தெரிவித்தார்.

ரெயில் பாலம்

பாம்பன் ரெயில் பாலத்தின் நூற்றாண்டு விழாவை நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக தென்னக ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஷ்ரா மண்டபம் வந்தார். மண்டபம் ரெயில் நிலையம் எதிரில் நூற்றாண்டு விழா நடைபெற உள்ள இடம், மேடை அமைக்கப்படும் இடம் போன்றவற்றை வரைபடம் மூலம் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் தென்னக ரெயில்வே பொது மேலா ளர் ராகேஷ் மிஷ்ரா நிருபர் களிடம் கூறியதாவது:- 



          பாம்பன் ரெயில் பாலத்தின் நூற்றாண்டு விழா 2014-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் இயக்குனர் சிதரன், மத்திய ரெயில்வே மந்திரி உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்- அமைச்சருக்கு அழைப்பு கொடுக்கப்படும்.

புதிய பாலம்

மண்டபத்தில் முதலில் விழாவை நடத்தி விட்டு அங்கிருந்து முக்கிய பிரமுகர்கள் சிறப்பு ரெயில் மூலம் பாம்பன் ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்படுவார்கள். அதன் பின்னர் பாம்பன் ரெயில் நிலையத்திலும் விழா நடைபெறும். பாம்பனில் நூற்றாண்டு விழா நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். பாம்பனில் போதுமான இடவசதி இல்லாததாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மண்டபத்தில் இந்த விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து அவர் ஒப்புதல் வழங்கியவுடன் பணிகள் தொடங்கும். நூற்றாண்டை கண்டுள்ள பாம்பன் ரெயில் பாலத்தின் உறுதி தன்மை குறித்து ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். அந்த அறிக்கை வந்த பின்னர் தான் பாம்பனில் புதிய பாலம் கட்டுவதா? அல்லது பாலத்தை மேலும் தரம் உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அழைப்பு

              முன்னதாக அவர் இராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வீட்டிற்கு சென்று கலாமின் அண்ணன் முகமது முத்துமீரான் லெப்பை மரைக்காயரை சந்தித்து பேசினார். அப்போது பிப்ரவரி 24-ந்தேதி நடைபெற உள்ள பாம்பன் ரெயில் பாலத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் தனுஷ்கோடிக்கு சென்று புயலால் அழிந்து போன ரெயில் பாதைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

0 Responses to “பாம்பன் ரெயில்பாலம் நூற்றாண்டு விழாவை மண்டபத்தில் நடத்த முடிவு தென்னக ரெயில்வே பொது மேலாளர் பேட்டி”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT