23 June 2013
இராமேசுவரம் ரெயிலில் கடத்தப்பட்ட 100 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்: 10 பேர் கைது
Do you like this story?
இராமேசுவரம் ரெயிலில்
கடத்தப்பட்ட 100 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்
10 பேர் கைது
இராமநாதபுரம், ஜூன் 23:
இராமேசுவரத்தில் இருந்து ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் ரெயிலில் சோதனை செய்ய முடிவு செய்தனர். இன்று காலை இராமேசுவரத்தில் இருந்து புவனேஸ்வருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.
அந்த ரெயில் ராமநாதபுரம் வந்தபோது இராமநாதபுரம் பி-1 காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் ரெயிலில் அதிரடி சோதனை செய்தனர். ஒவ்வொரு பெட்டியாக ஏறி சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் 80 மூட்டை ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு மூட்டையும் 25 கிலோ எடை கொண்டது ஆகும். ரெயிலில் கடத்தப்பட்ட 80 மூட்டை ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக புவனேஸ்வரத்தை சேர்ந்த சின்னா (வயது35), தில்சிகா (23), பாலாஜி (40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பரமக்குடி, மானாமதுரை ரெயில் நிலையங்களிலும் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரேசன் அரிசி கடத்துவது தொடர்பாக சோதனை நடந்தது.
பரமக்குடி ரெயில் நிலையத்தில் ஆர்.டி.ஓ. குணாளன் தலைமையில் நடந்த சோதனையில் 20 மூட்டை ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர்.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “இராமேசுவரம் ரெயிலில் கடத்தப்பட்ட 100 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்: 10 பேர் கைது”
Post a Comment