17 November 2013

திருவாடானை அருகே மாணவியை தற்கொலைக்கு தூண்டிய காதலன் கைது

திருவாடானை அருகே மாணவியை தற்கொலைக்கு தூண்டிய காதலன் கைது

  
திருவாடானை:

திருவாடானை அருகே உள்ள மங்களக்குடியை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 17) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இவரும் புதுவயல் கிராமத்தை சேர்ந்த உறவினர் பிரபு (25) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென்று பிரபு ஜெயந்தியை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயந்தி சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் பிரபுவை கைது செய்தனர்.

0 Responses to “திருவாடானை அருகே மாணவியை தற்கொலைக்கு தூண்டிய காதலன் கைது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT