24 June 2013

ஸ்ரீநகரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு 4 ராணுவ வீரர்கள் பலி

ஸ்ரீநகரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு

4 ராணுவ வீரர்கள் பலி


ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், ராணுவ வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெமினா என்ற இடத்தில் ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். 

இதற்கு பதிலடியாக ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

தீவிரவாதிகளை சமாளிக்க அதிக படைகள் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றம் நிறைந்து காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நாளை பிரதமர் மன்மோகன் சிங் செல்ல இருந்ததையொட்டி அங்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

0 Responses to “ஸ்ரீநகரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு 4 ராணுவ வீரர்கள் பலி”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT