25 June 2013

இராமநாதபுரம் - தேவிபட்டினம் அருகே இளம்பெண் கடத்தல் என்ஜினீயரிங் மாணவர் மீது புகார்

இராமநாதபுரம் - தேவிபட்டினம் அருகே 

இளம்பெண் கடத்தல் என்ஜினீயரிங் மாணவர் மீது புகார்



இராமநாதபுரம், ஜூன்.25:-

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள பழனிவலசை கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. விவசாயி. இவரது மகள் சுகுணா (வயது 21). இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த 20-ந்தேதி சுகுணா வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த முனியசாமி மகளை பல இடங்களில் தேடினார். எங்கும் அவரை காணவில்லை. விசாரணையில் அவர் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து முனியசாமி தேவிபட்டினம் போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகள் சுகுணாவை, பரமக்குடியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவர் பாலமுருகன் என்பவர் கடத்தி சென்றுவிட்டார்.

கடத்தப்பட்ட என் மகளை மீட்டு தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்து செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

0 Responses to “இராமநாதபுரம் - தேவிபட்டினம் அருகே இளம்பெண் கடத்தல் என்ஜினீயரிங் மாணவர் மீது புகார்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT