10 June 2013

இராமநாதபுரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் திறந்து வைத்த 'ஜூவல்ஒன்' ஜூவல்லரி

இராமநாதபுரத்தில் 

நடிகை ஸ்ருதிஹாசன் திறந்து வைத்த 

 'ஜூவல்ஒன்' ஜூவல்லரி


ராமநாதபுரம், ஜூன் 10:

கோவையை தலைமையிடமாக கொண்டு தங்க நகை தயாரிப்பு மற்றும் வணிக நிறுவனமான எமரால்டு ஜூவல்லரியில் இருந்து தயாராகும் தங்க நகைகள் 'ஜூவல்ஒன்' என்று அழைக்கப்படுகிறது.

ஜூவல்ஒன் பிரத்யேக ஷோரூம்கள் புதுவை, கள்ளக்குறிச்சி, கரூர், கோவை, வேலூர் மற்றும் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் புதிய ஜூவல்ஒன் ஷோரூம் இராமநாதபுரம் சுவாமி விவேகானந்தர் சாலையில் ராஜா தினகர் மேல்நிலைப்பள்ளி எதிரில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார். விழாவில் சக்தி சீனிவாசன், தனலெட்சுமி வாசுதேவன், கஸ்தூரி சுப்பிரமணி, பானுமதி பால சுப்பிரமணி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். எமரால்டு ஜூவல் இன்டஸ்ட்ரி இந்தியா நிர்வாக இயக்குனர் சீனிவாசன், சென்னை பி. தியாகராஜன் அன் கோ நிறுவன தணிக்கையாளர் ராஜகோபால், மதுரை கரூர் வைசியா வங்கி உதவி பொதுமேலாளர் லட்சுமணன், சென்னை ஸ்வர்ணசில்பி ஜூவல்லர்ஸ் ராகேஷ்குமார், ராமநாத புரம் எவரெஸ்ட் ஜூவல் லரி உரிமையாளர் வாசு தேவன், மதுரை லக்கி ஜூவல்லரி உரிமையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

பாண்டியன் சரஸ்வதி யாதவா பொறியியல் கல்லூரி தாளாளர் மலேசியா பாண்டியன், ராமநாதபுரம் மோகன் ஸ்டோர் உரிமையாளர் மோகன், தொழில் அதிபர் வெங்கடகிருஷ்ணன், மதுரை கண்ணழகன் கம்பெனி கண்ணழகன், முத்தாலம்மன் சிட்பண்டு நிர்வாக இயக்குனர் ஜெயக்குமார், ராம நாதபுரம் ஏசியன் நிறுவன நிர்வாக இயக்குனர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் முதல் விற்பனையை பெற்று கொண்டனர்.

எமரால்டு ஜூவல் இண்டஸ்டரி இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் கே.சீனிவாசன் வரவேற்று பேசினார். விழாவில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தொழில் அதிபர்கள் வெங்கடேஷ், நந்தகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

0 Responses to “இராமநாதபுரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் திறந்து வைத்த 'ஜூவல்ஒன்' ஜூவல்லரி”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT