10 June 2013

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் மற்றும் 18 பேருக்கு ஜாமீன்

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் மற்றும் 18 பேருக்கு ஜாமீன்


புதுடெல்லி:

கிரிக்கெட் சூதாட்ட புகாரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் மற்றும் சூதாட்ட தரகர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் ஸ்ரீசாந்தின் வக்கீல் அவருக்கு ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தக்கல் செய்து இருந்தார். கடந்த 7ம் தேதி இந்த மனு மீதான விசாரணை திங்கள் கிழமைக்கு நடைபெறும் என்று கோர்ட் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது. இதனை அடுத்து இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை

 விசாரித்த புதுடெல்லி, சாகேட் கோர்ட் ஸ்ரீசாந்த் மற்றும் 18 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், மராட்டிய அமைப்பு ரீதியான குற்றங்கள் கட்டுப்பாட்டு சட்டம் இவர்கள் மீது சுமத்துவதற்கு தெளிவான சான்றுகள் காணப்படவில்லை என்று கோர்ட் கூறியுள்ளது.

0 Responses to “ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் மற்றும் 18 பேருக்கு ஜாமீன்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT