10 June 2013

நடிகை ஜியா கான் தற்கொலை பிரபல நடிகரின் மகன் சுராஜ் பஞ்சோலி கைது

நடிகை ஜியா கான் தற்கொலை

 பிரபல  நடிகரின் மகன் சுராஜ் பஞ்சோலி கைது



மும்பை:


                                  இந்தி கஜினி பட நடிகை ஜியா கான்(வயது 25). இவர் கடந்த 4-ந்தேதி மும்பை ஜூகு பகுதியில் தனது வீட்டில் மின்சார விசிறியில், துப்பட்டாவினால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இந்த சம்பவம் குறித்து ஜூகு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜியா கான் குடும்பத்தினர், நடிகை ஜியா கான் தன்னுடைய கைப்பட எழுதியதாக கூறி 6 பக்கம் அடங்கிய கடிதம் ஒன்றை ஜூகு போலீசாரிடம் கொடுத்தனர். 

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிர படுத்தினார். இந்தநிலையில் பிரபல நடிகர் ஆதித்தியா பஞ்சோலியின் மகன் சுராஜ் பஞ்சோலியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். ஜியா கான் தற்கொலை செய்து கொண்ட போது சுராஜ் பஞ்சோலி அவருடம் நெருக்கமாக இருந்துள்ளார்.

0 Responses to “நடிகை ஜியா கான் தற்கொலை பிரபல நடிகரின் மகன் சுராஜ் பஞ்சோலி கைது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT