26 June 2013

சென்னை பல்லாவரம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து மாணவன் பரிதாப பலி மாணவி கவலைக்கிடம்

சென்னை பல்லாவரம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 

மாணவன் பரிதாப பலி


தாம்பரம்: 

                                 பல்லாவரம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து மாணவன் பலியானான். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒரு மாணவி கவலைக்கிடமாக உள்ளார். பல்லாவரத்தில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு பம்மல், அனகாபுத்தூர், குரோம்பேட்டை பகுதியில் இருந்து ஏராளமானோர் படிக்கின்றனர். 

இன்று காலை பம்மல், அனகாபுத்தூர் பகுதியில் இருந்து ஒரு வேன் 16 மாணவர்களை ஏற்றி கொண்டு பள்ளியை நோக்கி வந்தது. பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியல் சாலை மேம்பாலத்தில் ஒரு பைக்கை வேன் முந்தி சென்றது. 
அப்போது கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனில் மோதி, வேன் கவிழ்ந்தது. வேனில் இருந்த மாணவர்கள் அலறினர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள்  ஓடிவந்து மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்தனர். காயம் அடைந்த மாணவர்களை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 அங்கு சிகிச்சை பலனின்றி பம்மலை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் தீபக் (14) இறந்தான். மேலும் 6 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். 
  

இதில் மாணவி ஆர்த்தி தலையில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


வேன் டிரைவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.

0 Responses to “சென்னை பல்லாவரம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து மாணவன் பரிதாப பலி மாணவி கவலைக்கிடம் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT