6 September 2013

கொடைக்கானல் மலையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது: பெண் பலி

கொடைக்கானல் மலையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது
 பெண் பலி


கொடைக்கானல்:
 

                       கொடைக்கானல் மலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். அவரது கணவர் படுகாயமடைந்தார். கோவை மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ஜெயசீலன்(47). தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வி(40). 

இவர்களது மகனும், மகளும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தனியார் பள்ளியில் தங்கி படிக்கின்றனர். நேற்று மகளின் பிறந்தநாள் என்பதால் அவரை சந்திப்பதற்காக ஜெயசீலன், செல்வி இருவரும் புத்தாடை, கேக் வாங்கிக்கொண்டு காரில் தாராபுரத்தில் இருந்து புறப்பட்டனர்.

காலை 7 மணியளவில் கொடைக்கானல் , பெருமாள் மலை இடையே ஒரு வளைவில் கார் திரும்பியது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச்சுவரை இடித்து 300 அடி பள்ளத்தில் உருண்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே செல்வி பரிதாபமாக பலியானார். ஜெயசீலன் படுகாயமடைந்தார்.

கொடைக்கானல் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து செல்வியின் உடலை மீட்டனர். ஜெயசீலனை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். மகள் பிறந்த நாளில் தாய் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

0 Responses to “கொடைக்கானல் மலையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது: பெண் பலி”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT