6 September 2013
கன்னியாகுமரி அருகே மாயமான நர்சிங் மாணவி கொன்று புதைப்பு கோவை அழைத்துச் சென்று காதலன் வெறி
Do you like this story?
கன்னியாகுமரி அருகே மாயமான நர்சிங் மாணவி கொன்று புதைப்பு கோவை அழைத்துச் சென்று காதலன் வெறி
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே மாயமான நர்சிங் மாணவி காதலனால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரத்தை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகள் ஸ்டலின்ஜானா(20). இவர் நெய்யூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 1 ம் தேதி மாலை கல்லூரிக்கு பஸ்சில் சென்றவர் மாயமானார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். போலீசாரும் மாணவியை தேடி வந்தனர்.
மாணவி காணாமல் போய் 50 நாட்கள் தாண்டிய நிலையில், மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி மாணவியின் பெற்றோர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆட்கொணர்வு மனு செய்திருந்தனர். கடந்த மாதம் 21 ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த கன்னியாகுமரி போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்தநிலையில் கன்னியாகுமரி போலீசார் கூடுதல் அவகாசம் கேட்டு மனு செய்திருந்தனர்.
இந்தநிலையில் போலீசார் விசாரணையில் மாணவி ஸ்டலின்ஜானா திங்கள்சந்தை பகுதியில் உள்ள ஒரு டெலிபோன் பூத்தில் இருந்து கருங்கல் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியிடம் அடிக்கடி பேசியது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அந்த தொழிலாளியை பிடித்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
திங்கள்சந்தை பஸ் ஸ்டாண்டில் கட்டிட தொழிலாளியை ஸ்டலின்ஜானா சந்தித்துள்ளார். பின்னர் இது காதலாக மாறியுள்ளது. கடந்த ஜூலை 1 ம் தேதி காதலன் மாணவியை கோவைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். ஆனால் மாணவி அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் ஸ்டலின்ஜானாவை பிடித்து தள்ளியுள்ளார். அப்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஸ்டலின்ஜானா இறந்துள்ளார். இதனையடுத்து அவரை புதைத்துள்ளார். காதலனை கோவைக்கு அழைத்து சென்று உண்மை நிலவரங்களை கண்டறிய போலீசார் திட்டமிட்டுள்ளனர். நர்சிங் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “கன்னியாகுமரி அருகே மாயமான நர்சிங் மாணவி கொன்று புதைப்பு கோவை அழைத்துச் சென்று காதலன் வெறி”
Post a Comment