6 September 2013
தர்மபுரி அருகே கிணறு தோண்டிய போது ‘டைனோசர்’ படிமங்கள் கண்டெடுப்பு
Do you like this story?
தர்மபுரி அருகே கிணறு தோண்டிய போது ‘டைனோசர்’ படிமங்கள் கண்டெடுப்பு
தர்மபுரி :
தர்மபுரி அருகே விவசாய கிணறு தோண்டியபோது பெரிய விலங்குகளின் எலும்பு கூடு படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது ‘டைனோசர்’ எலும்புக்கூடாக இருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கோடுப்பட்டி முருங்க மரத்தரிசு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (42). இவரது நிலத்தில் நெல், மஞ்சள், கரும்பு சாகுபடி செய்துள்ளார். இதையடுத்து, பாசனத்திற்காக புதிய கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டார்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தோண்டிய நிலையில் 80 அடி ஆழம் வந்தது. அப்போது, மண்டை ஓட்டின் சிறுபகுதி, எலும்பு துண்டு படிமங்கள் தென்பட்டது. மேலும் இரண்டு இடத்தில் புதியதாக கிணறு வெட்டிய போதும் படிமங்களும், பச்சை, சிவப்பு நிறம் கொண்ட 2 வகை கிரானைட் கற்கள் படிந்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தர்மபுரி தொல்லியல் துறை மாவட்ட அலுவலர் நந்தகுமாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர், அதிகாரிகளுடன் கோடுப்பட்டிக்கு நேற்று முன்தினம் சென்றார். மண்ணில் புதைந்திருந்த பழமையான மண்டை ஓடு, எலும்பு கூடுகளை கைப்பற்றி தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தினார். இதில் மண்டை ஓடு, எலும்புகூடு பெரிய விலங்குகளுடையது என்றும், இது ‘டைனோசர்’ ஆக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட மண்டை ஓடு, எலும்பு துண்டு படிமங்கள் சென்னை தொல்லியல் துறை ஆணையரின் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,’’எலும்பு கூடுகளை பார்க்கும்போது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் ‘டைனோசர்’ போன்ற பெரிய விலங்குகள் வாழ்ந்திருக்கலாம் என இதன் மூலம் தெரியவந்துள்ளது. முழுமையாக ஆய்வு செய்ய எலும்புக்கூடு, மண்டை ஓடு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.

This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “தர்மபுரி அருகே கிணறு தோண்டிய போது ‘டைனோசர்’ படிமங்கள் கண்டெடுப்பு”
Post a Comment