9 September 2013

‘இன்ஸ்டாகிராமில்’ இணைந்த நாசா: அட்டகாசமான நிலவுப் படங்களை வெளியிட்டது

‘இன்ஸ்டாகிராமில்’ இணைந்த நாசா
 அட்டகாசமான நிலவுப் படங்களை வெளியிட்டது 
 

வாஷிங்டன்: 

            இன்ஸ்டாகிராமில் அமெரிக்காவின் நாசா அதிரடியாக இணைந்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே நிலவின் அட்டகாசமான படங்களை அது வெளியிட்டு பிரமிக்க வைத்துள்ளது. இந்த நிலவுப் படங்களுக்கு அமோகமான ஆதரவும் கிடைத்துள்ளது. இதுவரை நாசாவின் இன்ஸ்டாகிராமுக்கு 56,374 ஆதரவாளர்கள் கிடைத்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள நாசா அதில் வெளியிட்டுள்ள நிலவின் படங்கள் வியப்பின் உச்சத்திற்குக் கொண்டு செல்வதாக அமைந்துள்ளது.



முதலில் 2 படங்களை வெளியிட்டது நாசா. அதில் நிலாவின் பிரமாண்டம் அட்டகாசமாக இருக்கிறது. நிலவின் கிரே நிற பரப்பும், அதன் தரைத்தளமும் தெள்ளத் தெளிவாக தெரிகின்றன.


2வது படத்தில் பூமி படு அழகான கோணத்தில் காட்சி தருகிறது. மேலும் பல புகைப்படங்கள் வெளியாகவுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

நாசாவின் பல்வேறு கண்டுபிடிப்புகளும், சாதனைகளும், அரிய புகைப்படங்களும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்படும் என்று நாசா பத்திரிக்கைத் தொடர்பு செய்தித் தொர்பாளர் லாரன் வோர்லி கூறியுள்ளார்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புகைப்படங்கள், பூமி குறித்த புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் இதில் பதிவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to “‘இன்ஸ்டாகிராமில்’ இணைந்த நாசா: அட்டகாசமான நிலவுப் படங்களை வெளியிட்டது ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT