19 October 2013

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருந்த 63 பேர் கைது

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருந்த 63 பேர் கைது


 கமுதி:

                 இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்து ராமலிங்கத்தேவர் குரு பூஜை விழா வருகிற 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. குருபூஜை விழாவிற்கு வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது என்று போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை வாபஸ் பெறக் கோரியும், பசும்பொன் தேவர் குருபூஜை விழாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கக்கோரியும் பசும்பொன்னில் முத்து ராமலிங்க தேவர் நினைவிடத்தில் தேவர் பேரவை, முக்குலத்தோர் சங்கம், அகில இந்திய தேவர் இளைஞரணி மற்றும் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதியை சேர்ந்த தேவர் இன மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் இருந்து வந்தனர்.

கடந்த 2 நாட்களாக அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வியில் முடிந்தது.

கமுதி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், மேற்பார்வையில் கமுதி இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்–இன்ஸ்பெக்டர் அப்துல்லா ஆகியோர் நேற்று நள்ளிரவு தடையை மீறி உண்ணாவிரதம் இருந்து வந்த மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் அழகுமலை, அகில இந்திய தேவர் இளைஞரணி நிறுவனர் கணேசன், முதுகுளத்தூர் பால்சாமி உள்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர்.

0 Responses to “பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருந்த 63 பேர் கைது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT