15 October 2013

ஓட்டல் ஊழியர் கொலை மாணவியை காதலிக்கும் போட்டியில் நண்பனே தீர்த்துக்கட்டியது அம்பலம்

ஓட்டல் ஊழியர் கொலை
மாணவியை காதலிக்கும் போட்டியில் 
நண்பனே தீர்த்துக்கட்டியது அம்பலம்



சென்னை : 

        உத்திரமேரூர் பழைய மருத்துவமனை சாலையை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சதீஷ்குமார் (22). சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர், சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். தந்தை பெருமாள் கொடுத்த புகாரின்படி, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 5ம்தேதி உத்திரமேரூர் வளத்தோட்டம் பாலாற்று மேம்பாலத்துக்கு கீழ் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்ததில் இறந்து கிடந்தது சதீஷ்குமார் என தெரியவந்தது. 

இதையடுத்து, தனிப்படை போலீசார் முதல்கட்டமாக சதீஷ்குமாரின் நண்பர் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சதீஷ்குமாருடன் காஞ்சிபுரம் ஓட்டலில் வேலை செய்து வந்த திருத்தணி அருகே காஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்த சண்முகம் (19) மற்றும் 2 பேரை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். அப்போது 3 பேரும் சதீஷ்குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

போலீசில் சண்முகம் அளித்துள்ள வாக்குமூலம் பற்றி கூறப்படுவதாவது: சதீஷ்குமார் என்னிடம் பணம் வாங்கி ஏமாற்றி வந்தான். மேலும் 10ம் வகுப்பு மாணவியை சதீஷ்குமார் காதலித்தான். நானும் அவளை காதலித்தேன். அதை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சதீஷ்குமார் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சதீஷ் குமார் பற்றி மாணவியின் அண்ணனிடம் தவறான தகவலை தெரிவித்தேன். இதையடுத்து, நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.

அதன்படி கடந்த 5ம்தேதி இரவு மது வாங்கி தருவதாக சதீஷ்குமாரை வளத்தோட்டம் பாலாற்று பகுதிக்கு அழைத்து சென்றோம். அங்கு மதுவாங்கி கொடுத்தோம். போதை ஏறியதும் கத்தியால் சரமாரியாக சதீஷ்குமாரை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினோம். இவ்வாறு சண்முகம் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு சண்முகத்தை சைதாப்பேட்டை சிறையிலும், மற்ற இருவரையும் புரசைவாக்கத்தில் உள்ள காப்பகத்திலும் ஒப்படைத்தனர்.

0 Responses to “ஓட்டல் ஊழியர் கொலை மாணவியை காதலிக்கும் போட்டியில் நண்பனே தீர்த்துக்கட்டியது அம்பலம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT