18 October 2013

கோவில் உண்டியலை திருடிய கொள்ளையர்கள் கார் டயர் பஞ்சர் ஆனதால் ஊரணியில் வீசிவிட்டு ஓட்டம்

கோவில் உண்டியலை திருடிய கொள்ளையர்கள் கார் டயர் பஞ்சர் ஆனதால் ஊரணியில் வீசிவிட்டு ஓட்டம்


இராமநாதபுரம்:

இராமநாதபுரம் அருகே உள்ள கேணிக்கரையில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 3 அடி உயர சில்வர் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு ‘மர்ம’ ஆசாமிகள் கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அவர்கள் அங்கு இருந்த உண்டியலை அலாக்காக தூக்கி தாங்கள் வந்த காரில் வைத்து கடத்தி சென்றனர். தாயுமான சுவாமி கோவில் அருகே சென்றபோது கார் டயர் பஞ்சர் ஆனது.

உடனே கொள்ளையர்கள் காரில் இருந்த உண்டியலை கீழே இறக்கி உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு தேவிபட்டிணம் செல்லும் சாலையில் உள்ள லட்சுமிபுரம் ஊரணியில் தூக்கி வீசிவிட்டு ஓடிவிட்டனர்.

இன்று காலை பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். அப்போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் வந்து பார்த்தபோது உள்ளே இருந்த உண்டியல் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் கைரேகையை பதிவு செய்தனர். கொள்ளையர்கள் விட்டு சென்ற காரை போலீசார் மீட்டனர். மேலும் ஊரணியில் வீசப்பட்ட சில்வர் உண்டியலையும் மீட்டனர். தப்பி ஓடிவிட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

0 Responses to “கோவில் உண்டியலை திருடிய கொள்ளையர்கள் கார் டயர் பஞ்சர் ஆனதால் ஊரணியில் வீசிவிட்டு ஓட்டம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT