18 October 2013
கார்த்தி படத்தில் சிகரெட் காட்சி வசனம் : அதிகாரி கடும் எதிர்ப்பு
Do you like this story?
கார்த்தி படத்தில் சிகரெட் காட்சி வசனம் : அதிகாரி கடும் எதிர்ப்பு
கார்த்தி படத்தில் சந்தானம் பேசும் சிகரெட் வசன காட்சிக்கு அரசு துறை அதிகாரி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கார்த்தி, சந்தானம், காஜல் அகர்வால் நடிக்கும் படம் ஆல் இன் ஆல் அழகுராஜா.
இப்படத்தின் முன்னோட்ட காட்சி வெளியிடப்பட்டது. அதில் கார்த்தியிடம் சந்தானம் பேசும் வசனம் ஒன்றில், சிகரெட் பிடிப்பது பற்றிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு அரசின் புகையிலை தடுப்பு பிரிவு விளம்பரத்துக்கு எதிராக வசனம் இருப்பதாகவும், குறிப்பிட்ட காட்சியை நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அத்துறையின் அதிகாரி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பட இயக்குனர் ராஜேஷிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: படத்தின் முன்னோட்ட காட்சியில், புகை பிடிப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு வீடியோவுக்கு எதிராக வசனம் இடம்பெற செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. கார்த்தி சிகரெட் கேட்கும் போது அதற்கு பதில் அளிக்கும் சந்தானம் புகை பிடிப்பது பற்றிய விழிப்புணர்வு வீடியோ பற்றி காமெடியாக ஞாபகப்படுத்துவார். இதையடுத்து கார்த்தி சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிடுவார். இந்த காட்சிக்கு தணிக்கை குழு அனுமதி வழங்கி இருக்கிறது.

இந்த காட்சியை நீக்க வேண்டும் என்றால் இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் தணிக்கை அதிகாரியிடம் ஆலோசித்து விட்டு பிறகு சம்பந்தப்பட்ட புகையிலை தடுப்பு துறை அதிகாரியிடம் பேச தயாராக இருக்கிறோம். இவ்வாறு இயக்குனர் ராஜேஷ் கூறினார்.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “கார்த்தி படத்தில் சிகரெட் காட்சி வசனம் : அதிகாரி கடும் எதிர்ப்பு ”
Post a Comment