18 November 2013

இந்தியில் அமிதாப்பச்சனுடன் கைகோர்க்கும் தனுஷ்

இந்தியில் அமிதாப்பச்சனுடன் கைகோர்க்கும் தனுஷ்




இந்தியில் ‘பா’, ‘சீனிகம்’ என வித்தியாசமான படங்களைக் கொடுத்து இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பால்கி. இவருடைய இந்த இரண்டு படங்களிலும் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்திருந்தார்.

2009-ம் ஆண்டுக்குப் பிறகு எந்த படங்களையும் இயக்காத பால்கி தற்போது இந்தியில் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திலும் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அமிதாப்பச்சனுடன் இணைந்து தனுஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தியில் ‘ராஞ்சனா’ வெற்றிக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் இரண்டாவது படமே பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் உடன் நடிக்கவிருக்கிறார் என்பது அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

இப்படம் தனுஷுக்கு ஒரு லைப் டைம் படமாக இருக்கும் என பாலிவுட் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அளவுக்கு இந்த படத்தில் தனுஷூக்கு பவர்புல்லான கதாபாத்திரமாம். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் ஷாருக்கான்தான் பரிசீலனையில் இருந்தார். இப்போது திடீர் மாற்றமாக தனுஷ் நடிக்கிறார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இவர்களும் ஏற்கெனவே பால்கியின் முந்தைய படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள்தான். இப்படத்தில் நடிக்கும் பிற கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

0 Responses to “இந்தியில் அமிதாப்பச்சனுடன் கைகோர்க்கும் தனுஷ்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT