17 November 2013

திருச்சி அருகே இளம்பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் வீச்சு

திருச்சி அருகே இளம்பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் வீச்சு


மண்ணச்சநல்லூர், நவ. 17:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காட்டுக்குளம் சமத்துவபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இன்று காலை ஒரு பிளாஸ்டிக் பேரல் கிடந்தது.

அந்த வழியாக சென்றவர்கள் அருகில் சென்று பார்த்த போது ரத்தம் வடிந்த நிலையில் கட்டப்பட்ட ஒரு சாக்கு மூட்டை அந்த பேரலுக்குள் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் புலிவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியதால் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் அந்த பேரலை நிமிர்த்து அதற்குள் இருந்த சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்தனர். அப்போது போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதில் ரத்தக் காயங்களுடன் கழுத்தில் சராமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணம் அந்த சாக்கு மூட்டையில் இருந்தது.

இதையடுத்து அந்த பெண் யார்? அவரை கொலை செய்து வீசி சென்றவர்கள் யார்? கற்பழித்து கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையில் இறங்கினர்.

கடந்த 2–ந் தேதி இதே இடத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி புலிவலம் போலீசார் விசாரணை நடத்திய போது அவரது கையில் யமுனா என்று பச்சை குத்தப்பட்டிருந்தது.

அதை வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் மேலும் ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டு அதே இடத்தில் வீசப்பட்டுள்ளது பெண் விவகாரத்தில் இந்த 2 கொலைகளும் நடந்து இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

15 நாட்களுக்குள் 2 பேர் ஒரே இடத்தில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

0 Responses to “திருச்சி அருகே இளம்பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் வீச்சு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT