19 July 2013

திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வாலி மரணம்: இன்று இறுதி சடங்கு

திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வாலி மரணம்

 இன்று இறுதி சடங்கு

திரையுலகத்தினர் கண்ணீர் அஞ்சலி


சென்னை:
              பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர், வாலி, 82, மாரடைப்பால் நேற்று இறந்தார். அவரது உடலுக்கு, திரையுலகத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.

கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வாலி, இரண்டு மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நுரையீரல் தொற்று நோய் மற்றும் மூச்சுத் திணறலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காலை, மூச்சுத் திணறல் அதிகமானதால், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு வாலி இறந்தார். அவரது உடல், எம்.ஆர்.சி., நகரில் உள்ள கற்பகம் அவின்யூ வீட்டிற்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டது.

திரையுலகத்தினர், பாடகர்கள், பாடகிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். வாலியின் மனைவி ரமணத் திலகம், இரண்டு ஆண்டுக்கு முன் இறந்தார். பாலாஜி என்ற மகன் உள்ளார். வாலியின் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.

0 Responses to “திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வாலி மரணம்: இன்று இறுதி சடங்கு ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT