22 September 2013

பரமக்குடி குடியிருப்பில் உயிர்களை பலிவாங்க காத்திருக்கும் மின் கம்பம்

பரமக்குடி குடியிருப்பில் உயிர்களை பலிவாங்க காத்திருக்கும் 
மின் கம்பம்
 அகற்ற பொதுமக்கள் கோரிக்கை



பரமக்குடி, செப். 22:

பரமக்குடி புறநகர் பகுதியான நேருநகர் முதல் தெருவில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் தினமும், மாலை நேரங்களில் அப்பகுதியில் விளையாடி வருகின்றனர்.

இத்தெருவின் வீட்டின் அருகாமையில் மின் விளக்கு கம்பம் ஒன்று உள்ளது. இக்கம்பத்திற்கு பல மின் கம்பங்களுக்கு செல்லும் மின் கம்பிகளும், பல வீடுகளுக்கு மின் கம்பத்திலிருந்து மின் இணைப்புகளும் செல்கின்றன. இந்நிலையில் இந்த மின் கம்பம் பழுதடைந்து சிமெண்ட் பகுதிகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் முழுவதுமாக துருப்பிடித்து எலும்பு கூடாக காட்சியளித்து வருறது.

இதனால், மின் கம்பம் எந்த நேரமும் கீழே விழுந்து விடுமோ? என அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் பழுதடைந்துள்ள மின் கம்பம் உள்ள பகுதியை கடந்து செல்பவர்கள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மீது மின் கம்பம் முறிந்து விழுந்து உயிர் பலியாகி விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டு காலமாக பழுதடைந்து எலும்பு கூடாக இருந்து வரும் மின் கம்பம் பற்றி சம்பந்தப்பட்ட மின் வாரியம் வடக்கு பிரிவு அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் பலமுறை மனுக்கள் மூலமும் நேரிலும் முறையிட்டும், மின்சார துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சேது கருணாநிதி கூறுகையில் தெருவில் பழுதடைந்துள்ள மின் கம்பம் உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளாமல் மவுனம் சாதித்து வருவது கவலை அளித்துள்ளது.

எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி பழுதடைந்துள்ள மின் கம்பத்தை உடனடியாக மின்வாரியத்தினர் அகற்றி புதிய மின் கம்பம் அமைத்து அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.

0 Responses to “பரமக்குடி குடியிருப்பில் உயிர்களை பலிவாங்க காத்திருக்கும் மின் கம்பம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT