6 August 2013

நடிகை கனகாவால் உயிருக்கு ஆபத்து தந்தை பரபரப்பு புகார்

நடிகை கனகாவால் உயிருக்கு ஆபத்து தந்தை பரபரப்பு புகார்
 
 
சென்னை : 
 
                         கனகா உயிருக்கு ஆபத்து ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. போலீசார் தனக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கனகாவின் தந்தை கேட்டுக் கொண்டுள்ளார். கரகாட்டகாரன், தங்கமான ராசா, பெரிய வீட்டு பிள்ளை, தாலாட்டு கேட்குதம்மா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கனகா. மறைந்த பழம்பெரும் நடிகையான தேவிகாவின் மகளான இவர் தெலுங்கு படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார்.

 சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கனகா சில தினங்களுக்கு முன்னர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மறுப்பு தெரிவித்த கனகா, தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், தனது தந்தை இதுபோன்ற வதந்திகளை பரப்பி இருக்கலாம் என்றும் கூறி இருந்தார். தந்தை மீதான தனது ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கனகாவின் தந்தை தேவதாஸ் நேற்று ஒரு புகார் அளித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
என் மகள் கனகா சில தினங்களாக மன இறுக்கத்துடன் காணப்படுகிறார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பார் என்று நினைக்கிறேன். கனகா இறந்ததாக நான் வதந்தி பரப்பியதாக என்மீது அவர் குற்றம் சாட்டுகிறார். அதில், எந்த உண்மையும் இல்லை. சினிமா துறையில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்ட அவர் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காகவே, தான் இறந்து விட்டதாக தானே கூறி விட்டு தற்போது என் மீது பழி போடுகிறார்.

அவர் உயிருக்கு என்னால் ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சொல்லப்போனால், அவரால்தான் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள் ளது. எனவே, போலீசார் தனக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். கனகாவிடம் ஏராளமான சொத்துகள் உள்ளன. அவற்றை பறிப்பதற்காக யாரேனும் தாக்குதல் நடத்தலாம், அல்லது அவரே மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ளலாம். அப்படி ஏதேனும் நடந்தால் என் மீது சந்தேகம் வர வாய்ப்பு உள்ளது. எனவே, இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

என் மனைவி தேவிகாவின் சொத்தில் எனக்கு பாதி வர வேண்டும். அதை தற்போது, கனகா சட்ட விரோதமாக வைத்துள் ளார். அதை சட்டப்படி திரும்ப பெறுவேன். மகள் பல தவறுகளை செய்துள்ளார். அவற்றை தந்தை என்ற முறையில் பொறுத்துக் கொண்டேன். தொடர்ந்து இதுபோன்று என் மீது அவதூறு பரப்பினால், கனகா பற்றி மேலும் பல உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டியது வரும் என்றார்.


0 Responses to “நடிகை கனகாவால் உயிருக்கு ஆபத்து தந்தை பரபரப்பு புகார்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT