25 December 2013

தெற்கு ரயில்வேயில் புதிய திட்டம்: ஒருவர் எடுத்த முன்பதிவு டிக்கெட்டில் மற்றொருவர் பயணம்

தெற்கு ரயில்வேயில் புதிய திட்டம்
ஒருவர் எடுத்த முன்பதிவு டிக்கெட்டில் மற்றொருவர் பயணம் செய்யலாம்


நெல்லை:  

                 வழக்கமாக ரயிலில் பயணிக்க முன்பதிவு டிக்கெட் எடுத்தவர்கள், அந்த தேதியில் பயணிக்க முடியாவிட்டால், அதை ரத்து செய்யும் நடைமுறை தற்போது புழக்கத்தில் உள்ளது.

அந்த டிக்கெட்டில் வேறும் யாரும் பயணம் செய்ய முடியாது. இந்நிலையில், தற்போது ஏற்கனவே ஒருவர் பெயரில் எடுக்கப்பட்ட முன்பதிவு டிக்கெட்டில், வேறொரு நபர் பயணிக்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒருவரது பெயரில் முன்பதிவு செய்து எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டை, அவரது குடும்பத்திலுள்ள வேறு ஒருவரது பெயரில் மாற்றி பயணிக்கலாம். இதற்காக, குறிப்பிட்ட ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே, ரயில்வே மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க வேண்டும். குடும்ப உறுப்பினர் என்பதற்கு ரேஷன் கார்டு போன்ற அடையாள ஆவணங்களின் நகலை கொடுக்க வேண்டும். இதேபோல், பள்ளி அல்லது கல்லூரி மாணவரின் பெயரில் எடுக்கப்பட்டுள்ள டிக்கெட்டை அந்த கல்வி நிறுவன முதல்வரின் ஒப்புதலோடு, வேறொரு மாணவர் பெயரில் மாற்றி கொள்ளவும் புதிய திட்டத்தில் வசதி உள்ளது.திருமணம் போன்ற விழாக்களுக்கு குழுவாக செல்பவர்களின் டிக்கெட்டுகளையும் மாற்றிக் கொள்ள முடியும். அலுவலக பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் அரசு ஊழியர்களும், இந்த வசதியை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட அரசு ஊழியர் செல்ல முடியாதபோது, வேறொரு ஊழியரின் பெயரில் டிக்கெட்டை மாற்றி கொள்ளலாம். இதற்காக, பயணம் செய்ய உள்ள ஊழியர், உயர் அதிகாரி மூலம் விண்ணப்பித்து டிக்கெட்டை தன் பெயரில் மாற்றி கொள்ளலாம்.

எக்ஸ்ட்ரா தகவல்
               பயணிகள் ரயில் சேவை மூலம் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைத்தாலும் அதற்கு ஆகும் செலவு அதிகம். பயணிகள் ரயில்கள் இயக்குவதால் ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது.

0 Responses to “தெற்கு ரயில்வேயில் புதிய திட்டம்: ஒருவர் எடுத்த முன்பதிவு டிக்கெட்டில் மற்றொருவர் பயணம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT