1 December 2013

பரமக்குடியில் முள்செடியில் சிக்கி தவித்த மயில் மீட்பு

பரமக்குடியில் முள்செடியில் சிக்கி தவித்த மயில் மீட்பு




பரமக்குடி, டிச. 1:

பரமக்குடியில் முள்செடியில் சிக்கி காயம் அடைந்து தவித்த மயிலை கல்லூரி மாணவர்கள் இருவர் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பரமக்குடி புறநகர் பகுதியான காட்டு பரமக்குடியில் சம்பவத்தன்று அரசு கல்லூரி மாணவர்கள் ராஜகோபால், மணிராஜா ஆகிய இருவரும் வயல் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அந்த சமயம் அப்பகுதியில் உள்ள முள்செடி ஒன்றில் மயில் ஒன்று சிக்கி பறக்க முடியாமல் அவதிப்படு வதை கண்டனர். மயில் உடலின் மேல் பகுதியில் காயங்களுடன் இருந்ததை கண்ட மாணவர்கள் இருவரும் அந்த மயிலை உயிருடன் மீட்டு பரமக்குடியில் உள்ள நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

கல்லூரி மாணவர் களின் மனிதாபிமான செயலை கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன், சப்–இன்ஸ்பெக்டர்கள் சல்மோன், அமுதா மற்றும் போலீசார் பாராட்டினர். தொடர்ந்து இதுகுறித்து பரமக்குடியில் உள்ள வனத்துறையினருக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது. பின்பு வனத்துறை அலுவலர் பேச்சிமுத்து, தோட்டக் காவலர் நாகேஸ்வரன் ஆகிய இருவரிடம் மயில் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து காயம் அடைந்த மயிலுக்கு வனத்துறை அலுவலர் பேச்சிமுத்து மருந்துகள் தடவி மாணவர்கள் உதவியுடன் மீண்டும் காட்டு பரமக்குடியில் பிடிபட்ட பகுதியில் மயிலை விட்டு விட்டனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காட்டு பரமக்குடி பகுதியில் முள்செடியில் சிக்கி காயம் அடைந்த 6 மாத ஆண் மயிலை கல்லூரி மாணவர்கள் இருவர் மனித நேயத்துடன் உயிருடன் காப்பாற்றி ஒப்படைத்தது பாராட்டுக்குரிய செயலாகும். வன விலங்குகளை வேட்டையாடுவது குற்றமாகும் என்றார்.

0 Responses to “பரமக்குடியில் முள்செடியில் சிக்கி தவித்த மயில் மீட்பு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT