20 November 2013

நண்பர்களுக்கு பார்ட்டி சச்சின் நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு பார்ட்டி சச்சின் நெகிழ்ச்சி


 சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்ற சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர், தனது நெருங்கிய நண்பர்களுக்கு திங்களன்று இரவு விருந்து கொடுத்தார். இந்த பேர்வெல் பார்ட்டியில் இந்திய அணி கேப்டன் டோனி, முன்னாள் நட்சத்திரங்கள் கங்குலி, டிராவிட், லஷ்மண், அதிரடி வீரர் சேவக், கவாஸ்கர், ஸ்ரீகாந்த், சந்தீப் பட்டீல் உட்பட கிரிக்கெட் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.இளம் வீரர்கள் யுவராஜ், கோஹ்லி, ரோகித், தவான் ஆகியோரும் வந்திருந்தனர். ஹர்பஜன் சிங் தனது தோழி கீதா பஸ்ராவுடன் வந்திருந்தார்.


பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், ஆமிர் கான், ராகுல் போஸ், இயக்குனர் கரண் ஜோகர், சச்சினின் பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கர் என பார்ட்டி களைகட்டியது. மத்திய அமைச்சர் சரத் பவார், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான், ராஜ் தாக்கரே ஆகியோரும் கலந்து கொண்டனர். விருந்தினர்கள் அனைவரையும் மனைவி அஞ்சலியுடன் இணைந்து வரவேற்ற சச்சின் அன்புடன் உபசரித்து மகிழ்ந்தார். முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

0 Responses to “நண்பர்களுக்கு பார்ட்டி சச்சின் நெகிழ்ச்சி”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT