20 November 2013
சிம்பு ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா
Do you like this story?
சிம்பு ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா
சென்னை:
நடிகர் சிம்பு ஜோடியாக நடிகை நயன்தாரா மீண்டும் நடிக்கிறார்.‘வல்லவன்’ படத்தில் நடித்தபோது, சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. பிறகு இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தன. பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். ‘இனி சிம்புவுடன் நடிக்க மாட்டேன்’ என்றும் நயன்தாரா அறிவித்தார். பிறகு, 2008&ம் ஆண்டில் ‘வில்லு’ படத்தில் நடித்தபோது பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா, பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக இந்து மதத்துக்கு மாறினார். பிரபுதேவா பெயரை கையில் பச்சைக் குத்திக்கொண் டார்.
இந்நிலையில் இவர்கள் காதலில் திடீர் பிரச்னை ஏற்பட்டது. ‘பிரபுதேவாவை பிரிந்துவிட்டேன்’ என்று சொன்ன நயன்தாரா பிறகு படங்களில் நடிக்க முடிவு செய்தார். இரண்டாவது காதல் முறிந்த நிலையில் அவர் நடித்த, ‘ராஜாராணி’, ‘ஆரம்பம்‘ படங்கள் ஹிட்டாகின. இப்போது, உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘அனாமிகா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹன்சிகாவை காதலித்து வரும் சிம்பு, பாண்டிராஜ் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படங்களில் ஒரே நேரத்தில் நடித்துவருகிறார்.

இதில் பாண்டிராஜ் இயக்கும், ‘லவ்வுனா லவ்வு அப்படியொரு லவ்வு’ என்ற படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க, நயன்தாராவிடம் பேசி வந்தனர். இப்போது அவர் சம்மதித்துள்ளார்.
இதுபற்றி தினகரன் நிருபரிடம் பாண்டிராஜ் கூறியதாவது:
இதுபற்றி தினகரன் நிருபரிடம் பாண்டிராஜ் கூறியதாவது:
இது காதல் கதை. முதலில் நயன்தாராவிடம் நடிக்க கேட்க முடிவு செய்தோம். தேவையில்லாத சர்ச்சைகள் வரும் என்று சிம்பு மறுத்தார். நயன்தாராவும் முதலில் சம்மதிக்கவில்லை. ‘இந்த கதைக்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள். கதையை கேளுங்கள்’ என்றேன். கேட்டார். பிறகு கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கால்ஷீட் ஒதுக்கிக் கொடுத்துள்ளார். சிம்பு சினி ஆர்ட்ஸும் எனது பசங்க புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கிறது. குறளரசன் இசை அமைக்கிறார். சிம்புவுக்கு நண்பனாக சூரி நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினும் வேண்டும். தேடி வருகிறோம். படத்தின் டைட்டில் மாற்றப்படலாம். அடுத்த வாரம் நயன்தாரா நடிக்கும் காட்சிகளை படமாக்குகிறோம். இவ்வாறு பாண்டிராஜ் கூறினார்.முன்னாள் காதலர்களான சிம்புவும் நயன்தா ராவும் மீண்டும் இணைந்து நடிப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “சிம்பு ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா”
Post a Comment