14 May 2013

அறிமுகம்: தெண்டுல்கரின் உருவம் பொறித்த தங்க நாணயம்


தெண்டுல்கரின் உருவம் பொறித்த தங்க நாணயம் அறிமுகம்



                    அட்சய திருதியை நாளையொட்டி கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. 

வேல்யூ மார்ட் என்ற நகைக்கடை நிறுவனத்தின் விளம்பர தூதராக தெண்டுல்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவரை கவுரவிக்கும் விதமாக 24 கேரட் தங்கத்தில் தெண்டுல்கரின் உருவம் மற்றும் கையொப்பம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை வேல்யூ மார்ட் நிறுவனம் அட்சய திருதியை நாளான நேற்று வெளியிட்டது. 

மும்பையில் நடைபெற்ற விழாவில் தெண்டுல்கர் இந்த நாணயத்தை அறிமுகப்படுத்தினார். 


24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட 10 கிராம் தங்க நாணயத்தின் (நேற்றைய) விலை ரூ.34 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பதிப்பாக (லிமிட்டெட் எடிஷன்) ஒரு லட்சம் நாணயங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. 


நாடு முழுவதும் உள்ள வேல்யூ மார்ட் நிறுவன கிளைகளிலும், குறிப்பிட்ட சில நகைக் கடைகளிலும் இந்த சிறப்பு நாணயங்கள் கிடைக்கும்.

0 Responses to “அறிமுகம்: தெண்டுல்கரின் உருவம் பொறித்த தங்க நாணயம் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT