14 May 2013

பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவில் கொடி கட்டி பறக்கும் விபசாரம்!!


பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவில் கொடி கட்டி பறக்கும் விபசாரம்!! 

பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவின்போது பாலியல் தொழில் அதிகளவில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரான்சின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடக்கிறது. இந்த விருது ஒஸ்கர் விருதுக்கு சமமாக மதிக்கப்படுகிறது.

இந்த விழாவுக்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் நடிகர், நடிகைகள், மாடல் அழகிகள், அழகி போட்டியில் பங்கேற்றவர்கள், அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், சிறப்பு விருந்தினர்கள், திரைப்பட துறையினர், கோடீஸ்வரர்கள் வருவார்கள்.

விழாவை முன்னிட்டு அசத்தலான ஏற்பாடுகள், பாதுகாப்பு என பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

பிரமாண்டமாக நடக்கும் விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், கேளிக்கை திருவிழாக்களின்போது பாலியல் தொழிலும் கொடிகட்டி பறக்கும்.
இதற்காகவே நட்சத்திர ஓட்டல்கள், உல்லாச படகுகள் தயாராகி விடுகின்றன. மிகப்பெரிய நெட்வொர்க் அமைத்து பாலியல் தொழிலில் பலர் ஈடுபடுகின்றனர். 

இதற்காகவே பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு, ஆங்கிலம் உள்பட பல மொழிகள் கற்று தரப்படுகின்றன.

குறிப்பாக அரபு நாடுகளில் இருந்து வரும் கோடீஸ்வரர்களுக்கு கேன்ஸ் நகரில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது.

இதுகுறித்து லெபனானில் மாடலிங் ஏஜென்சி நடத்தி வரும் எல்லி நஹாஸ் என்பவர் கூறுகையில், வழக்கமாகவே கேன்ஸ் திரைப்பட விழாவின்போது விபசார தொழிலும் பெரிய அளவில் நடக்கும்.
உலகம் முழுவதும் இருந்து பிரபல புள்ளிகள் வருவார்கள் என்பதால் பண புழக்கமும் அதிகளவில் நடக்கும்.

அரபு நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர்கள் சிலர் விபசாரத்துக்காகவே விழாக்களுக்கு வருவதும் உண்டு. இது கடந்த 60 ஆண்டுகளாகவே நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவுக்காகவே பிரான்ஸ், இங்கிலாந்து, வெனிசுலா, பிரேசில், மொராக்கோ, ரஷ்யா உள்பட பல நாடுகளில் இருந்து பாலியல் அழகிகள் வருவதாக பொலிசார் கூறுகின்றனர். (நன்றி: லங்காசிறி(

                             


இந்த 66வது கேன்ஸ் (cannes)  சர்வதேச திரைப்பட விழாவின் ஒன்பது நடுவர்களில் ஒருவராக ,The Dirty Picture  படத்தில் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் நடித்துக் கலக்கிய நம்மூரு நடிகை வித்யா பாலனும் கடமையாற்றப் போகிறார். அத்தோடு உலகப் பேரழகி ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன், அங்கிள் அமிதாப் பச்சன் ஆகியோருடனும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

0 Responses to “பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவில் கொடி கட்டி பறக்கும் விபசாரம்!! ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT