13 May 2013

ஜெய் ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகம் :அர்ஜூன்



ஜெய் ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகம் :அர்ஜூன்


                                            ஆக்ஷன் கிங் என்றழைக்கப்படும் அர்ஜூன் தான் இயக்கிய வெற்றிப்படமான ஜெய் ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். நடிகராக மட்டுமல்ல, இயக்குநராகவும் வெற்றி பெற்றவர் அர்ஜூன். இதுவரை பத்துப் படங்கள் இயக்கியிருக்கிறார். 

                                                       அவற்றில் ஜெய் ஹிந்த் பெரிய வெற்றிப் படமாகும். அர்ஜூன், ரஞ்சிதா, கவுண்டமணி, செந்தில் நடித்திருந்தனர். கடமை தவறாத காவல் அதிகாரியாக நடித்திருந்தார் அர்ஜூன். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை, அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2 என்ற பெயரில் இயக்குகிறார் அர்ஜூன். 




     தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் செய்கிறார். படத்தின் நாயகனும் அவரே. மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சுர்வின் சாவ்லா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர, நான்கு இளம் நடிகைகளும் நான்கு மாணவர்களும் இதில் அறிமுகமாகின்றனர். 

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் இந்தப் படத்தை எடுக்கிறார் அர்ஜுன். ரூ 20 கோடி செலவில் தயாராகும் இந்தப் படத்தின் வசனத்தை கோபிகிருஷ்ணா எழுத, இணை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார் ஜெகன். 


                                    இந்தப் படம் குறித்து அர்ஜூன் கூறுகையில், "இந்தப் படம் மீடியாவுக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் எனது சமர்ப்பணமாகும். இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கலாமின் கனவுக்கு ஒரு வடிவம் கொடுக்கிறேன் இந்தப் படத்தில். இந்தப் படத்தில் எனது முந்தைய படங்களின் தொடர்ச்சி எதுவும் இருக்காது. இது முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும். சென்னை, மும்பை, டெல்லி உள்பட பல இடங்களில் படப்பிடிப்பை நடத்துகிறோம்," என்றார். 


0 Responses to “ஜெய் ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகம் :அர்ஜூன்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT