28 June 2013

அமெரிக்காவில் 1977ல் தடைசெய்யப்பட்ட அனால்ஜின் மாத்திரைக்கு இந்தியாவில்2013 தடை

அமெரிக்காவில் 1977ல் தடைசெய்யப்பட்ட

அனால்ஜின் மாத்திரைக்கு இந்தியாவில் 2013 தடை



புதுடெல்லி : 

              தலைவலிக்கு பயன்படுத்தும் அனால்ஜின் மாத்திரையால், உடலில் வெள்ளை அணுக்கள் குறைவது கண்டறியப்பட்டது. 

இதேபோல், நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் பியோகி லிடாஜோன் மாத்திரையால் வயிற்றில் புற்றுநோய் கிருமி ஏற்படுவது தெரிய வந்தது. 

இதையடுத்து அனால்ஜின் மாத்திரைக்கு 1977ம் ஆண்டிலேயே அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது.

2011ம் ஆண்டில் பியோகிலிடாஜோன் மாத்திரையை பிரான்ஸ் தடை செய்தது. இதுபோன்று பல்வேறு நாடுகள் இம்மருந்துகளுக்கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில், இவ்விரு மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இப்போது தடை விதித்துள்ளது.

 நாடாளுமன்ற நிலைக்குழு, வெளிநாடுகளில் இம்மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 Responses to “அமெரிக்காவில் 1977ல் தடைசெய்யப்பட்ட அனால்ஜின் மாத்திரைக்கு இந்தியாவில்2013 தடை”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT